மெதிலீன் புரோமைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
Dibromomethane[1]
| |
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
74-95-3 | |
Abbreviations |
|
Beilstein Reference
|
969143 |
ChEBI | CHEBI:47077 |
ChemSpider | 2916 |
EC number | 200-824-2 |
Gmelin Reference
|
25649 |
யேமல் -3D படிமங்கள் | Image |
ம.பா.த | methylene+bromide |
பப்கெம் | 3024 |
வே.ந.வி.ப எண் | PA7350000 |
| |
UN number | 2664 |
பண்புகள் | |
CH2Br2 | |
வாய்ப்பாட்டு எடை | 173.84 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற திரவம் |
அடர்த்தி | 2.477 கி மிலி−1 |
உருகுநிலை | −52.70 °C; −62.86 °F; 220.45 K |
கொதிநிலை | 96–98 °C; 205–208 °F; 369–371 K |
12.5 கி லி−1 (20 °செல்சியசில்) | |
ஆவியமுக்கம் | 4.65 kPa (at 20.0 °C) |
என்றியின் விதி
மாறிலி (kH) |
9.3 μ மோல் பாசுகல்−1 கிகி−1 |
-65.10·10−6 செமீ3/மோல் | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.541 |
வெப்பவேதியியல் | |
வெப்பக் கொண்மை, C | 104.1 ஜூல் கெல்வின்−1 மோல்−1 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | WARNING |
H332, H412 | |
P273 | |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
|
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மெத்திலீன் புரோமைடு அல்லது டைபுரோமோமீதேன் , அல்லது மெத்திலீன் டைபுரோமைடு ஒரு ஆலோமீத்தேன் ஆகும். இது தண்ணீரில் சிறிதளவு கரையக்கூடியது. ஆனால், கரிம கரைப்பான்களில் மிகவும் கரையக்கூடியது. இது நிறமற்ற திரவமாகும்.
தயாரிப்பு
[தொகு]இருகுளோரோமீத்தேனிலிருந்து புரோமோகுளோரோமீத்தேன் வழியாக வணிக ரீதியாக இருபுரோமோமீத்தேன் தயாரிக்கப்படுகிறது:
- 6 CH2Cl2 + 3 Br2 + 2 Al → 6 CH2 BrCl + 2 AlCl3
- CH2 Cl2 + HBr → CH2 BrCl + HCl
இரண்டாவதான வினை வழிக்கு அலுமினியம் குளோரைடு ஒரு வினையூக்கியாக தேவைப்படுகிறது. புரோமோகுளோரோமீத்தேன் பின்னர் மேற்கண்ட ஜோடி மாற்றங்களுக்கு ஒத்த எதிர்விளைவுகளில் மேலும் செயல்படுகிறது:
- 6 CH2 BrCl + 3 Br2 + 2 Al → 6 CH2 Br2 + 2 AlCl3
- CH2 BrCl + HBr → CH2 Br2 + HCl
ஆய்வகத்தில், இது புரோமோஃபார்மில் இருந்து தயாரிக்கப்படுகிறது :
- CHBr3 + Na3 AsO 3 + NaOH → CH2 Br2 + Na3 AsO4 + NaBr
சோடியம் ஆர்சனைட்டு மற்றும் சோடியம் ஐதராக்சைடு ஆகியவற்றைப் பயன்படுத்தி மேற்கண்ட வினையானது நிகழ்கிறது. [2]
மற்றொரு வழி டையோடோமீதேன் மற்றும் புரோமின் ஆகியவற்றிலிருந்து தயாரிக்க வேண்டும்.
பயன்கள்
[தொகு]டைபுரோமோமீத்தேன் ஒரு கரைப்பானாகவும், வழித்தடத்திரவமாகவும் மற்றும் கரிமத் தொகுப்பு முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. கேடகால்களை அவற்றின் மெதிலீன்டையாக்சி வழிப்பொருள்களாக மாற்ற இது ஒரு ஏதுவான காரணியாகும்.
இயற்கையில் கிடைக்கும் விதம்
[தொகு]இது இயற்கையாகவே கடல் பாசிகளால் உற்பத்தி செய்யப்பட்டு கடல்களுக்குள் விடுவிக்கப்படுகிறது. மண்ணில் வெளியிடப்படும் போது அது ஆவியாகி தரையில் கசியும். தண்ணீரில் வெளியிடப்படுவதால், 5.2 மணிநேர அரை ஆயுள் காலத்துடன், முக்கியமாக ஆவியாகும் தன்மையால் இழக்கப்படுகிறது. இது குறிப்பிடத்தக்க உயிரியல்சார்ந்த அல்லது உயிரியல்சாராத விளைவுகளைக் கொண்டிருக்கவில்லை. ஒளி வேதியியல் ரீதியாக உற்பத்தி செய்யப்படும் ஐதராக்சைல் உறுப்புகளின் வினை காரணமாக வளிமண்டலத்தில் அது இழக்கப்படும். இந்த வினையின் மதிப்பிடப்பட்ட அரை ஆயுள் காலம் 213 நாட்கள் ஆகும்.
குறிப்புகள்
[தொகு]- Podsiadlo M.; Dziubek K.; Szafranski M.; Katrusiak A. (December 2006). "Molecular interactions in crystalline dibromomethane and diiodomethane, and the stabilities of their high-pressure and low-temperature phases". Acta Crystallogr. B 62 (6): 1090–1098(9). doi:10.1107/S0108768106034963. பப்மெட்:17108664. http://scripts.iucr.org/cgi-bin/paper?bk5037. பார்த்த நாள்: 2007-06-29.
- ↑ "methylene bromide - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 25 March 2005. Identification. பார்க்கப்பட்ட நாள் 18 June 2012.
- ↑ W. W. Hartman, E. E. Dreger (1929). "Methylene bromide". Org. Synth. 9: 56. doi:10.15227/orgsyn.009.0056.